Featured Articles
All Stories

அல்சர் வருவதைத் தடுக்க......!!!!!

முதலில் நேரத்துக்கு உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். கவலை, கோபம், எரிச்சல் போன்ற மனநிலைகளின்போது சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சாப்பிடும்போது சந்தோஷமான மனநிலைக்கு மாறிவிடுங்கள். இரைப்பைப் புண் உள்ளவர்கள் அடிக்கடி சிறிது சிறிதாக உணவை உண்பது நல்லது. மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும்.
வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளைஅதிகப்படுத்துங்கள். விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். அதிக இனிப்புப் பண்டங்களையும், புளித்த உணவுகளையும் ஒதுக்குங்கள். கீரைகளில் மணத்தக்காளியும், காய்கறிகளில் முட்டைக்கோஸும் இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்த உதவுகின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் பட்டினி கிடக்கக் கூடாது. சாப்பிட்டதும் படுக்கக்கூடாது.
எச்.பைலோரி கிருமி அசுத்தமான தண்ணீர் மூலம்தான் பரவுகிறது. ஆகவே, இதைத் தடுக்கச் சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டியது முக்கியம். புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, பான்மசாலா பயன்படுத்தக் கூடாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகள், ஆஸ்துமா, அலர்ஜி நோய்களுக்குத் தரப்படும் ஸ்டீராய்டு மாத்திரைகள், உடல்வலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.
இரைப்பைப் புண் குணமாக, எல்லா விதக் கவலைகளில் இருந்தும் விடுபட வேண்டும். மன அமைதியும் ஓய்வும் மிக முக்கியம். இதற்குத் தியானம் செய்வது நல்லது, இரைப்பைக்கு வலு சேர்க்கும் யோகாசனங்களும் உள்ளன. தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர் ஒருவரின் உதவியுடன் இவற்றை முறைப்படி செய்துவர, இரைப்பைப் புண் வருவதைத் தடுக்கலாம்

Posted at 08:28:00 |  by யோகராஜா சந்ரு

60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து....!!

இயற்கை மருத்துவர் ஜான் கிறிஸ்டோபரின் 35 வருடங்கள் மருத்துவ சேவையில், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு பாதிக்கபட்டவர்கள் இந்த எளிய மருத்துவத்தால் ஒரு 
நபர் கூட இறந்ததில்லை என்று சொல்கிறார். ஆனால் பாதிக்கப்பட்டவரின் மூச்சு நின்று விடாமல் இருக்க வேண்டும். இவருடைய மிளகாய் பொடி தேநீர் 60 
செகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்து, சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கிவிடுவார்கள் என்கிறார். அதனால் வீட்டில்
மிளகாய் பொடி தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

எவ்வாறு செய்வது:
ஒரு டீஸ்பூன் மிளகாய்பொடியை மிதமான சுடு தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் நினைவுடன் இருந்தால் சிறிதளவு பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும். இது ஒரு முதலுதவி மருந்து போன்றது. மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல
வேண்டும். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிடாமல் உதவும். இவ்வாறு செய்வதால் அவர்களை காப்பாற்றுவது உறுதி என்கிறார். எவ்வாறு வேலை செய்கிறது:

காரமான மிளகாய் பொடியில் 90,000 கார யூனிட் (H.U. heat unit) இருப்பதாகவும், இதுவே ஹாரட் அட்டாக் ஏற்பட்டவரை திரும்பவும பழை நிலைக்கு கொண்டு வருவதாக கூறுகிறார்.

Posted at 08:10:00 |  by யோகராஜா சந்ரு

தலைமுடி அடர்த்தியாக, கருப்பாக, வளர,,,,!!!

சிகப்பு செம்பருத்தி செடி இலை எடுத்து அரைத்து, அதை தலையில் தேய்த்து குளிக்கவும்.நல்ல,குளிர்ச்சியாக இருக்கும், உடல் சுடு தனியும்,அடர்த்தியா கருப்பாக முடி வளரும்.வாரம் இருமுறை குளிக்கலாம்.
கருகருவென்று கூந்தல் வளர!
செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதுயம் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், தலை "ஜில்' லென்றிருக்கும். தலை முடி "புசுபுசு'வென அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தல், ஆறடி கூந்தலாகி விடும்
செம்பட்டை கூந்தல் கருகருவாக எளிய குறிப்பு
உளுந்தம் பருப்பு ஒன்றரைத் தேக்கரண்டியையும், 15 எண்ணிக்கை கொண்ட கருவேப்பிலைகளையும் எடுத்துக்கொண்டு, இதனை புளித்த மோரில் ஊரவைத்து அறைக்க வேண்டும்.
இப்படி உருவாக்கிய பேஸ்டை, நாள்தோறும் ஒரு பத்து முதல் பதினைந்து நிமிடம் வரையில் தலையில் தேய்த்து உலர்த்திய பிறகு குளிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்துவர, செம்பட்டை கூந்தல் விரைவில் கருகருவாகும்.
கூந்தல் அழகாக இருப்பதற்கு
வாரம் இருமுறையாவது தலைக்கு எண்ணெய் தடவி ஊறவிட்டு, பாசிபருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஊறவிட்டு அத்துடன் வேப்பிலைகளையும் சேர்த்து அரைத்து தலையில் தடவிக் குளித்தால் தலைமுடி மென்மையாகவும், பொடுகுத் தொல்லையின்றி அழகாகவும் மாறிவிடும். செயற்கையான ஷாம்புவைவிட இது மிகவும் நல்ல பலனைத் தரும்.
கருமையான கூந்தலைப் பெற கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி உபயோகிக்கலாம்
கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்
*ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்கவழக்கம்.
* மன உளைச்சல், கோபம், படபடப்பு.
* கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள்.
* கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது.
* அளவுக்கதிகமான வெயில், உப்புக் காற்று, குளோரின் கலந்த நீர் மற்றும் சுற்றுப்புற மாசு.
கூந்தல் அழகாக இருப்பதற்கு
வாரம் இருமுறையாவது தலைக்கு எண்ணெய் தடவி ஊறவிட்டு, பாசிபருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஊறவிட்டு அத்துடன் வேப்பிலைகளையும் சேர்த்து அரைத்து தலையில் தடவிக் குளித்தால் தலைமுடி மென்மையாகவும், பொடுகுத் தொல்லையின்றி அழகாகவும் மாறிவிடும். செயற்கையான ஷாம்புவைவிட இது மிகவும் நல்ல பலனைத் தரும்.
கருமையான கூந்தலைப் பெற கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி உபயோகிக்கலாம்.

Posted at 08:05:00 |  by யோகராஜா சந்ரு

வெற்றிக்கொடி கட்டிய ஜெயலலிதாவின் வெற்றி சிறப்புரை

Posted at 20:30:00 |  by யோகராஜா சந்ரு

மிளகின் மருத்துவ குணங்கள்

மிளகின் மருத்துவ குணங்கள்

Posted at 18:09:00 |  by யோகராஜா சந்ரு

உடல் பருமனை குறைக்கும் கரும்பு சாறு:

உடல் பருமனை குறைக்கும் கரும்பு சாறு:

Posted at 18:06:00 |  by யோகராஜா சந்ரு

சுகப்பிரசவத்திற்கு துளசி சாப்பிடுங்க...

சுகப்பிரசவத்திற்கு துளசி சாப்பிடுங்க...
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சாப்பிடுவது வலியின்றி பிரசவம் ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறியுள்ளது.
கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள், 7வது மாதத்தில் இருந்து கடைசி 3 மாதங்களில் கர்ப்பிணி தனது உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். இந்த காலங்களில் அதிக திரவ உணவுகள், பழங்கள் நல்லது. கரு வளர இவை அதிகபயனளிக்கும்.
பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகளை உணவில் அதிகரிக்க வேண்டும். கர்ப்பிணிகள் துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக அருந்தலாம். அது பிரசவ காலத்தை எளிதாக்கும். அதேபோல் கர்ப்பிணிகள் அவ்வப்போது சில துளசி இலைகளை மென்று வர, வலியின்றி பிரசவம் ஏற்பட வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள் துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக அருந்தலாம். அது பிரசவ காலத்தை எளிதாக்கும். அதேபோல் கர்ப்பிணிகள் அவ்வப்போது சில துளசி இலைகளை மென்று வர, வலியின்றி பிரசவம் ஏற்பட வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

Posted at 08:51:00 |  by யோகராஜா சந்ரு

சீனி - சில கசப்பான உண்மைகள்!


மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போதுஇதர உணவுகள் குளூகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.
சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.
சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.டின் பானங்கள், செயற்கை சத்துணவுமுதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.
உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.
சீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத் தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்குநொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள்அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது.இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.
தினமும் 24 தேக்கரண்டி சீனி நமதுஉணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களைஎதிர்க்கும் தன்மை உடையவை.
உடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது.அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும்நோய் எதிர்ப்புசக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.
கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.
காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங்கள் போதும். காபி, டீ சாப்பிடாதவர்கள்சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள்.மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

Posted at 08:48:00 |  by யோகராஜா சந்ரு

என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?


1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்
4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.
6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).
7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
10. காலிபிளவர்: பூக்களுக்கிடையேஇடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும.

Posted at 08:46:00 |  by யோகராஜா சந்ரு

ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும்பேரீச்சை!!


அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள ் இதில்நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும்.
எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு.
பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியத ு டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்க ும், சருமத்திற்கும் அவசியமானது.
சிறந்த நோய் எதிர்ப்பொருள்கள ான லுடின்,ஸி-சாந்த ின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்க ளை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.
பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலு ம் பங்கெடுக்கிறது.
பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உ டலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவ திலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.
கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்த ல்ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.

Posted at 08:41:00 |  by யோகராஜா சந்ரு

சர்க்கரை நோயை ஒரு மாதத்தில் விரட்டணுமா? இந்த வீடியோவைப் பாருங்க

சர்க்கரை நோயை ஒரு மாதத்தில் விரட்டணுமா? இந்த வீடியோவைப் பாருங்க

Posted at 00:00:00 |  by யோகராஜா சந்ரு

இப்படியெல்லாம் ஒரு வதந்தியா- கடுப்பில் சமந்தா

இப்படியெல்லாம் ஒரு வதந்தியா- கடுப்பில் சமந்தா 

Posted at 22:32:00 |  by யோகராஜா சந்ரு

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்! ! ! !


1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.
5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.
8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒருட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

Posted at 20:47:00 |  by யோகராஜா சந்ரு

அல்சர், சர்க்கரை வியாதியை நீக்கும் வெற்றிலை! ! ! !


மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும்.
இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
வயிற்றுவலி:
இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும்.
ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கியபின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.
தலைவலி:
வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.
தேள் விஷம்:
இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால்தேள் விஷம் உடனே முறியும்.
சர்க்கரை வியாதி:
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.
தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரைகொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.
அல்சர்:
அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும்.
முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ்சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

Posted at 20:40:00 |  by யோகராஜா சந்ரு

இத்தனை வித்தைகள் தேங்காயில் உண்டா? தேங்காயின் சத்துப் பட்டியல்! ! ! !


தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது.இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்...
* தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது.வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.
* சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், மாமிசம் உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும்.
* அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந்துள்ளது. 100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது.மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது.
* 'லாவுரிக் ஆசிட்' எனும் கொழுப்பு அமிலம் தேங்காயில் உள்ளது. இது ரத்தத்தில் உடலுக்குஅவசியமான எச்.டி.எல். வகைகொழுப்புகளை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்கிறது. எச்.டி.எல். கொழுப்புகள் ரத்தத்தைஎடுத்துச் செல்லும் கரோனரி தமனியில் தடை ஏற்படுவதை தடுக்கும் ஆற்றலுடையது.
* தேங்காய் தண்ணீர், கோடைக்கு உகந்த புத்துணர்ச்சி பானமாகும். இதில் ஒற்றைச் சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகள், தாது உப்புக்கள் மற்றும் சைட்டோகைனைன் போன்ற பல உடல் செயற்காரணிகள் உள்ளன. பாஸ்படேஸ், கேட்டலேஸ், டீகைட்ரோஜனேஸ், பெராக்சைடேஸ், பாலிமரேஸ் போன்ற நொதிக் காரணிகளும் தேங்காய் நீரில் உள்ளன. இவை ஜீரணம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில்பங்கெடுக்கும் நொதிகளாகும்.
* தேங்காய் எண்ணை சமைப்பதிலும், கூந்தல் உறுதிக்கும், வேறுபல மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
* தேங்காய் நீரில் உள்ள சைட்டோகைனைன், முது மையை தடுக்கும் ஆற்றல் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரத்தக் கட்டிகள் மற்றும் புற்றுக் கட்டிகளுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டது.

* தேங்காய் பருப்பில் தாமிரம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் உள்ளன.
* பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான போலேட், ரிபோ பிளேவின், நியாசின், தயாமின், பைரிடாக்சின் போன்ற வையும் சிறந்த அளவில் காணப்படுகிறது. இவை உடல் உள்ளுறுப்புகள் இயக்கத்திற்கும், உடல் புத்துணர்ச்சிக்கும் அவசியமானவையாகும்.
* தேங்காய் பருப்பை அப்படியே சாப்பிடலாம்.
* வாழை, பலா, தேன், சர்க்கரை ஆகியவற்றுடன் தேங்காயை பூவாகத் துருவி கலந்து புதுருசியில் சுவைக்கலாம்.

Posted at 20:25:00 |  by யோகராஜா சந்ரு

பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்


பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.
அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம்.
வெங்காயம்
வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.
பூண்டு
பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.
உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.
தேன்
உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.
வாழைப்பழம்
வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
பூசணிக்காய்
பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.
மெலாம்பழம்
கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த மெலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், மெலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய மெலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.
இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

Posted at 20:13:00 |  by யோகராஜா சந்ரு

பனாமா பணச்சலவை - இலங்கையர்கள் தொடர்பான விபரம் வெளியீடு.பெயர் விபரங்கள் இணைப்பு

பனாமா பணச்சலவை - இலங்கையர்கள் தொடர்பான விபரம் வெளியீடு.பெயர் விபரங்கள் இணைப்பு
Posted at 01:03:00 |  by யோகராஜா சந்ரு

எப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் 21 குறிப்புகள்

1. தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளை சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இருதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் மூன்றாண்டுகளை அதிகரிகëகும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள். இருதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலத்தைக் காக்கும் `செலினியம்’ ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து.
2. உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணை வகை மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய `ஒமேகா 3 பேட்டி ஆசிட்’, எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது.
3. சாப்பாடுகளுக்கு இடையே 3 மணி நேர இடை வெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.
4. தினசரி நான்கு `கப்’ காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேன பேர்வழி எனறு காபியையே துறக்க வேண்டாம். அளவாக காபி பருகுவது, சர்க்கரை நோய், உணவுக் குழாய் கேன்சர், ஈரல் நோய்களைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
5. தினந்தோறும் 5 வகை பழஙகள், காய்கறிகள் சாப்பìடுவது ஆரோக்கிய ஆரோக்கியவாழ்வுக்குவுக்கு அடித்தளமிடும். பழங்கள், காய்கறிகளில் உள்ள `ஆண்டிஆக்ஸிடன்ட்கள்’ கேன்சர், இருதய நோய்கள் போன்ற மோசமான நோய்களைத் தடுக்கும்; நோய்த்தொற்றுக்கு எதிராக இருக்கும். மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரைச் சத்தையும் கொண்டுள்ளன.
6. வயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்கவேண்டாம். சமையல் செய்யும் போதுமட்டும் உப்பை சேர்க்கவேண்டும். பிரெட், `பேக்கிங் உணவு’ வகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.
7. மொத்தம் 7 வகையான நிறங்களைக் கொண்ட காய்கறிகள், பழங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான `ஆண்டி ஆக்ஸிடன்ட்களை’ கொண்டிருக்கின்றன. எனவே எல்லா வண்ண காய்கறி, பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும்.
8. தினமும் 8 கப் திரவம் குடிப்பது அவசியம். ஆனால் அது எல்லாம் தண்ணீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டீ, காபியும் இதில் இடம்பெறலாம்.
9. சராசரியாக பெண்கள் 9 வகை மாவுச்சத்து உணவுகளை (ஆண்களுக்கு 11 வகை) சாப்பிட வேண்டும். ஒரு துண்டு ரொட்டி, முட்டை அளவு உருளைக்கிழங்கு, 28 கிராம் சாதம் போன்றவை இதில் அடங்கியிருக்கலாம.
10. சாதாரணமாக குளிர்பானஙகளில் 10 சதவீத சர்க்கரை உள்ளது. அதாவது ஒரு புட்டியில் 150 கலோரி இருக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் பருகுவது தொப்பைக்கு ஒரு முக்கியக் காரணம். `டயட்’ குளிர்பானங்களுக்கு மாறலாம்; ஜுஸுடன் அதிக தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.
11. காலை உணவும், இரவு உணவும் 11 மணியைத் தாண்ட வேண்டாம். அதிக பசியின்போது நீங்கள் அதிகமாகச் சாப்பிட்டு விடுவீர்கள்.
12. பொதுவாக பெண்கள் உணவில் 12 மில்லி கìராம் இரும்புச் சத்தை எடுத்துக் கொள்கிறார்கள். இரும்புச் சத்து செறிந்த உணவுகளை உங்கள் உணவில் தினசரி சேர்த்துக்கொள்ளுங்கள்.
13. சாதாரணமாக நாம் நமது ஒவ்வொரு கிலோ எடைக்கும் 26 கலோரி உணவு சாப்பிடலாம்.
14. மதுபானம் அருநதும் வழக்கம் உள்ளவர்கள் படிப்படியாக நிறுத்த வேண்டும்.
15. நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும்முன்பு 15 முறை மெல்ல வேண்டும். நாம் சராசரியாக 7 முறைதான் உணவை மெல்கிறோம்.
16. ஆண்களுக்குத் தினசரி 16 சதவீத புரதம் அவசியம். அதாவது 55 கிராம். பெண்களுக்கு என்றால் 45 கிராம்.
17. நாம் அனைத்து விதமான சத்துகளையும் பெற, ஒவ்வொரு 3 நாட்களுக்கும் 17 விதமான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
18. அனைவருக்கும் தினசரி 18 கிராம் நார்சத்து தேவை. அதற்கு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை நல்ல ஆதாரங்கள்.
19. மொத்தம் 19 வகையான தாது உப்புகள், வைட்டமின்கள் அனைவருக்கும் அவசியத் தேவை என்பது மருத்துவர்களின் கருத்து.
20. உங்கள் தினசரி உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. உங்கள் தினசரி கலோரிகளில் 35 சதவீதத்துக்குள்தான் கொழுப்பின் பங்கு இருக்க வேண்டும்.
21. பால் சார்ந்த உணவு வகைகளில் 21, ஒவ்வொரு வாரமும் உங்கள் உணவுப் பட்டியலில் இருப்பது கட்டாயம். தினசரி மூன்று வகையான பால்சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.
நன்றி: தகவல் களஞ்சியம்

Posted at 23:33:00 |  by யோகராஜா சந்ரு

சூடாக காப்பி, டீ குடிப்பவரா? சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!

“மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”
இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர்.
சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.
தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது.

காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகை யையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே டீ வந்தாக வேண்டும். “பெட் டீ’ குடித்தபின் தான் திருப்பள்ளியெழுச்சி நடக்கும். அந்த அளவுக்கு டீ மோகம் உள்ளது.
“காலையில் எழுந்தாலும் சரி, மற்ற நேரங்களிலும், சூடா ஒரு டீ குடித்தால் போதும்… உடல் இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட மாதிரி; அப்புறம் தான் வேலையே ஓடும்’ என்று பலர் குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.

ஆபீசில் வேலை செய்வோரும், தொழிற் சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் மணிக்கொரு தரம் டீ குடித்தால் தான் சோர்வு நீங்கியது போல உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில் கொடுத்தாலும், அதை குடித்தால் தான் சுறுசுறுப்பே வரும்.
அதிக சூடாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் கோளாறு பற்றி கடந்த சில ஆண்டாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்திய நிபுணர்கள் ஆபத்தான சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வு முடிவுகளில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:
* வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.
* அதிகமான சூட்டுடன் டீ குடித்தால் , உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.
* இதனால், சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது. மற்றவர்களை விட, சில பழக்க வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.
* பான் பராக், புகையிலை போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம்.
* பீடி குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது.
* சிகரெட் பிடிப்போருக்கு இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது.
* மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8 மடங்கு.
* அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
* வெயில் பருவத்தை விட குளிர்காலத்தில், குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் சூடாக டீ குடித்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்
* சூடான பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பு வாய்ப்பு குறைவு தான்.
இவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
அதிக சூடாக டீ குடித்தால் தான் கேன்சர் வரும்; அதிக சூடாக காபி குடித்தால்…? இப்படி காபி குடிப்பவர் களுக்கு கேன்சர் வாய்ப்பு அதிகரித்ததே இல்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இவர்களின் ஆய்வு முடிவுகளை சர்வதேச நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.டாடா நிபுணர்கள்,தங்கள் ஆய்வுக்கு காஷ்மீரில் 1,500 பேரிடம் சர்வே எடுத்துள்ளனர். அவர்களில் அதிக சூடாக டீ குடிப்போருக்கு கேன்சர் ஆபத்து உள்ளதை உறுதி செய்தனர்.
ஆண்டுக்கு, இப்படிப்பட்டவர்களில் சராசரியாக 800 பேருக்கு கேன்சர் வருவதும் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் சர்வதேச கேன்சர் ஆராய்ச்சி இதழ், “இன்டர்நேஷனல் கேன்சர் எபிடமாலஜி’யில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.அது சரி, நீங்கள் அதிக சூடாக டீ குடிப்பவரா? அப்படீன்னா, இனி குடிக்க மாட்டீங் கல்ல….அப்படி நீங்க குடித்தால் உண்மையில் நீங்கள் தைரிய சாலிதான் !

Posted at 20:56:00 |  by யோகராஜா சந்ரு

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்

பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது.
வடக்கு மெக்ஸிகோவும், வட அமெரிக்காவும் இதன் தாயகமாகும். நீண்ட, மத்திய, குட்டை எனப் பல வகைகள் பீர்க்கனில் உண்டு.

உலகில் அமெரிக்கர்கள்தாம் பீர்க்கன்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள். அவர்கள் சாப்பிடும் லூஃபா அக்யுட்ஆங்குலா (Luffa Acutangula) என்ற வகைப் பீர்க்குதான் எல்லா நாடுகளிலும் பிரபலம்.
பழுத்த பிறகு தான் முற்றிய பிறகு தான் பீர்க்கங்காயைச் சமையலில் சேர்க்க வேண்டும். காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம் போன்றவை தோன்றும்! சளிக் கோளாறுகளும் தோன்றும். அதனால்தான் மார்க்கெட்டுகளில் முற்றிய பீர்க்கன் காய்களே விற்பனை செய்யப்படுகின்றன.
இதுவும் ஒரு டானிக் காய்கறிதான்!
100 கிராம் பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது. கால்சியம் 40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச் சத்து 1.6 மி.கிராமும், வைட்டமின் ‘ஏ’ 56 அகில உலக அலகும், ரிஃபோபிளவின் 0.01 மி.கிராமும், தயாமின் 0.07 மி. கிராமும், நிகோடின் அமிலம் 0.2 மி.கிராமும், வைட்டமின் 5 மி.கிராமும் உள்ளன.

நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.
முற்றிய பீர்க்கன் காயை மட்டும் சமைத்துண்பதால் மேற்கண்ட நன்மைகள் நமக்குக் கிடைக்கும்.
பீர்க்கன்காய் கொடி இனத்தை சேர்ந்தது. இந்திய விவசாய சமூகம் கண்டுபிடித்துள்ள ‘பூசா கஸ்தார்’ என்னும் ரகம் மிகவும் உயர்வானது. தமிழ்நாட்டில்தான் அதி நீள உயர் ரகம் பீர்க்கு என்னும் ஓர் ரகம் பயிரிடப்படுகிறது. இவ்வகைக் காய்கள் 70 முதல் 90 செ.மீ. வரை நீளமானவையாகவும் 200 கிராம் எடை கொண்டனவாயும் இருக்கின்றன. காய்கள் பச்சை நிறத்திலும் காணப்படும்.

100 கிராம் பீர்க்கனில் கிடைக்கும் கலோரி 18 தான். எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.முற்றிய பீர்க்கனில் லுஃபின் (Luffin) என்னும் கசப்புப் பொருள் இருக்கிறது. பீர்க்கனின் விதைகளில் ஒரு விதமான நறுமண எண்ணெய் இருக்கிறது. நார்ச்சத்தும் உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக்கொள்ளக்கூடிய மாவுச்சத்தும் பீர்க்கனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.
இதன் பொருட்டே பீர்க்கன் கொடியின் இலைகள், வேர், விதைகள் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையாய்த் திகழ்கின்றன.
புண்ணுக்கு மருந்து!
சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம்.

பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.
பீர்க்கன் காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய்யாய்த் திகழ்கிறது.
இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும்.
கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
காய்கறிகளுள் பச்சையாகச் சாப்பிடக் கூடாத காய்கறி இதுதான். கசப்புச் சுவை அதிகமாய் இருப்பதால் இதைக் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும்.
தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி!

Posted at 20:49:00 |  by யோகராஜா சந்ரு

அரை ஸ்பூன் சர்க்கரை போதும் டென்ஷன் பஞ்சாய் பறக்கும்

தலையை பிய்த்து கொள்ள வைக்கும் டென்ஷனான நேரங்களில் கொஞ்சம் சர்க்கரை சாப்பிட்டால் டென்ஷன் பஞ்சாய் பறந்து விடும் என்கிறார்கள் அமெரிக்காவின் ஒஹியோ மாநில ஆராய்ச்சியாளர்கள்.மன உளைச்சல் அதிகம் ஏற்படும் போது உடல், மனம் மட்டுமின்றி மூளையும் களைப்படைகிறது. இதனால் வேறு எந்த வேலையைப் பற்றியும் சிந்திக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து உடனடியாக வெளிவர உடனடி மருந்து சர்க்கரை தானாம். இந்த ஆராய்ச்சிக்காக அதிகப்படியான டென்ஷன் பாதிப்புக்குள்ளான சுமார் 2000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் மூளை செயல்பாடுகளை கண்காணித்தனர். இவர்களை 2 பிரிவுகளாகப் பிரித்து, முதல் பிரிவினருக்கு மன உளைச்சல் அதிகமாகும் போது சர்க்கரை அல்லது சர்க்கரை கலந்த தண்ணீரை கொடுத்தனர். இன்னொரு பிரிவினருக்கு இது கொடுக்கப்படவில்லை. இதில் சர்க்கரை கொடுக்கப்பட்டவர்கள், உடனடியாக தங்கள் கவலையில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெற்றது கண்டறியப்பட்டது.
அமெரிக்காவின் ஒஹியோ மாநில பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், டென்ஷனை குறைக்கும் எளிய வழியை கண்டுபிடிக்க ப்ரட் புஷ்மன் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் வெளியாகி உள்ள தகவல் தான் இது. இது குறித்து ப்ரட் புஷ்மன் தெரிவித்தவை:
டென்ஷன் பாதிப்பில் இருக்கும் போது நிம்மதியின்றி இருப்போம். தூக்கம் வருவதும் கடினம். மருந்து மாத்திரைகளும் உடனடி பலன் தராது. அத்தகைய சமயங்களில் சர்க்கரை நிச்சயம் கை கொடுக்கும். அரை ஸ்பூன் சர்க்கரை மூளை செயல்பாட்டை தூண்டி புத்துணர்ச்சி அளிக்கும். டென்ஷன் உடனடியாக மறைந்து விடும். சர்க்கரை ரத்தத்துடன் கலந்து குளுகோசாக மாறி மூளைக்கு செல்கிறது. குளுகோஸ் கிடைத்தவுடன் மூளை வலுவாக செயல்பட்டு சுறுசுறுப்பாகிறது.

Posted at 20:43:00 |  by யோகராஜா சந்ரு

எவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் செய்வது ?


புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகை பிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது ஆளாளுக்கு வித்தியாசப்படலாம்.
எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
✔ இதை செய்வதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். உதாரணத்திறக்கு பால், தேநீர், தயிர், மோர், வெண்னெய், சீஸ் போன்றவை. உடலிருந்து நச்சுகளை நீக்க வேண்டியது அவசியம். எனவே தவறாது இதை கடைபிடிக்க வேண்டும்.
✔ சுத்தம் செய்வதற்க்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். சுத்தம் செய்ய நுரையீரலுக்கும், உடலுக்கும் ஒய்வு தேவை. எனவே கடுமையான பயிற்சிகள், வேலைகளை செய்ய வேண்டாம்.
முதல் நாள்:
✔ இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும்.
✔ ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான கிரேப்புரூட் சாற்றை குடிக்கவும். இதன் சுவை பிடிக்காவிட்டால் கிரேப்புரூட் சாற்றுக்கு பதிலாக பைனாப்பிள் சாற்றை குடிக்கலாம். எல்லாம் சுத்தமான தண்ணீர், சர்க்கரை கலக்காத சாறாக இருக்கட்டும். இந்த சாறுகளில் இயற்கையான சுவாசத்தை சீராக்கும் ஆன்டிஆக்ஸிடன்டஸ் நிறைந்துள்ளதால் நமது நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.
✔ மதிய உணவிறக்கு முன்பாக 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றை பருகவும். இதில் தண்ணீரோ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது. கேரட் சாறு சுத்தம் செய்யும் மூன்று நாட்களும் இரத்தத்தை அமில நிலையிலிருந்து காரத்தன்மைக்கு மாற்றுகிறது.
✔ இரவு படுக்கபோகும் முன்பு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த கிரேன்பெரி போன்ற சாற்றை குடிக்க வேண்டும். பொட்டாசியம் சுத்தம் செய்ய ஒரு டானிக்காக உதவுகிறது. இது உடலின் உள்ளுறுப்புகளில் முக்கியமாக சிறுநீர்பாதை, நுரையீரல் தொற்றுகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்குகின்றது. கிரேன்பெரி கிடைக்காதவர்கள் சுத்தமான சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள், ஆரஞ்சு சாற்றை கலப்பிடமில்லாமல் குடிக்கலாம்.
✔ இதை மூன்று நாட்கள் கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிடவேண்டும். குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வேர்வையை வெளியேற்றவும்.
அல்லது 20 நிமிடங்களில் சுடுதண்ணீரில் குளிக்கலாம். வியர்வை வெளியேறும்போது நச்சுகளும் வெளியேறும்.
✔ இரவில் கொதிநீர் ஆவி பிடிக்கவேண்டும். 5 முதல் 10 சொட்டுவரை யூகாலிப்ட்டஸ் ஆயில் கொதிநீரில் சேர்த்து தலையினை சுத்தமான போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்கவும். இவ்வாறு கொதிநீர் ஆறும்வரை ஆவி பிடிக்கவும்.
✔ மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிக்கவும். ஆஸ்த்துமா, நுரையீரல் அழற்ச்சி, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கும் நல்ல பலனை அளிக்கும்.

Posted at 20:36:00 |  by யோகராஜா சந்ரு

உடற்பருமனைக் குறைக்க வழி..

உடற்பருமனைக் குறைக்க வழி உடல் எடையைக் குறைப்பதற்காக எடுத்த உணவுகளினால் எடைகுறையாமல் விரக்தியா? எல்லா முறைகளிலும் கொழுப்பு உண்பதைக் குறைத்தாலும் எடை இன்னும் போடுகிறதா? நீண்ட காலமாக உணவில் அதிகரித்த வெல்லம அல்லது மாச்சத்து மற்றும் உணவுகளை உண்டுவந்திருப்பதனால், தற்பொழுது உடலானது மாச்சத்து ஆக்கசிதைவுச்செயற்பாடுகளை செவ்வனே செய்ய முடியாது போய்விடுகிறது. அத்துடன் மேலதிக மாச்சத்து கொழுப்பாக உடலில்; குறிப்பாக உடலின் இடைப்பகுதியில் சேமிக்கப்படுகிறது. எமது உணவில் கொழுப்பினளவையும், அது தரும் சக்தியின் கலோரிக் அளவையும் கவனத்தில் கொள்ளும் நாம் எமக்குத் தெரியாமலே அதிகமாக வெல்லம் அல்லது மாச்சத்து உள்ளெடுத்துவிடுகின்றோம். பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் தற்பொழுது எமது மூதாதையரைக் காட்டிலும் 25 மடங்கு சீனியை அதிகமாக உட்கொள்கின்றனர். இவற்றில் பெரும்பான்மையானவை முன் தாயாரிக்கப்பட்ட உணவுகளில் ஒளிந்து கிடக்கிறது. அதிகமான சீனி அளவைக் கொண்ட உணவை உண்ணும் பொழுது, மிகவும் விரைவாக குருதியில் வெல்ல அளவு அதிகரிக்கிறது. திடீரென அதிகரித்த வெல்ல அளவு உடலின் ஆக்கச்சிதைவு தொழிற்பாட்டைப பாதிப்பதனால், மேலதிகமான சீனி அல்லது வெல்லம் அகற்றப்பட முடியாமல் கொழுப்புக் கலங்களில் சேமிக்கப்படுகிறது. ஏதாவதொரு உணவு மிகவிரைவாக குருதியில் வெல்ல அளவை அதிகரிக்குமானால் அது உயர் குருதி வெல்லக் குறியீடு கொண்டது எனக் குறிப்பிடலாம். குருதியில் வெல்ல அளவு அதிகமாக காணப்படும் பொழுது மேலதிக வெல்லத்தை மாற்றி சேமிப்பு செய்வதற்காக பெருமளவில் இன்சுலின் சுரக்கப்படுகிறது.

இதை எண்ணிப் பார்ப்போமேயானால் நாம் ஒவ்வொருவரும் பல தடவைகளில் அதிகமான வெல்ல அளவினைக் கொண்டவர்களாக இருந்திருப்போம். சீனி போட்டு தயாரித்த பானங்கள், கேக் வகைகள், உணவுக்கு பின்னர் உண்ணும் இனிப்புணவுகள் குறியீட்டளவில் உயர்ந்ததாக காணப்படும். வேறு பல உணவுகளும், உதாரணமாக ஜக்கெற் பொட்ரற்ரோ பிரஞ் பிரைஸ், வெள்ளை அரிசிச் சோறு, வெள்ளைப் பாண் (வைற் பிறட்) போன்றனவும் குருதியில் உயர் வெல்லளவைத் தரும் குறியீட்டைக் கொண்டுள்ளன. மேற்கத்தேய நாடுகளில் நாமுண்ணும் உணவுகள் சராசரியாக பெருமளவு உயர் குருதி வெல்லம் தரும் குறியீட்டைக் கொண்ட உணவுகளே அதிகம் காணப்படுகின்றன. எமது குருதியில் பெரும்பான்மையான நேரங்களில் வெல்லத்தின் அளவு அதிகரிக்கும் போது, சதையிக்கு மேலதிகமான வெல்;லத்தை (குளுக்கோஸ்) சக்தி சேமிப்புக் கலங்களில் சேமித்து வைக்குமாறு செய்தி சொல்லப்படுகின்றது. இந்த வெல்ல சேமிப்புக்கான மாற்றத்தை நிகழ்த்த, சதையிலிருந்து விடுவிக்கப்படும் இன்சுலின் தேவையானதாகும். குருதியில் மிகவும் உயர்ந்தளவு வெல்லத்தின் அளவு உடல் நலனுக்கு ஆபத்தானதாகும். சேமிப்புக் கலங்களில், தசை, ஈரல் கலங்கள் முதன்மை பெறுகின்றன. இன்னும் எஞ்சிய குருதி வெல்லம் கொழுப்பாக எமது கொழுப்புக் கலன்களில் சேமிக்கப்படுகின்றது. எப்படியாயினும், உயர்ந்த வெல்லளவுள்ள உணவுகளும் பெரும்பாலும் ஓரிடத்திலமர்ந்த வண்ணம் வேலை செய்யும் எம்மவரின் பலரின் வெல்ல சேமிப்புக் கலங்கள் பொதுவாக நிரம்பிய இருக்கும். இக்கலங்கள் மிகவும் நிரம்பியிருப்பதால் கலங்கள் ஊதிப் (உப்பிப்) போயிருக்கும். இந்நிலையில் உடல் பருமனடைந்ததாக இருக்கும். இந்நிலையில் சேமிப்புக்கலங்கள் மேலும் குளுக்கோஸை உள்ளெடுக்க முடியாத நிலையில், மேலதிகமான குளுக்கோஸ் வெல்லச் சுற்றோட்டத்தில் சுற்றிச் செல்லும். இது பொதுவான ஆக்கச் சிதைவுச் செயற்பாட்டினை தரம் குறைக்கச் செய்வதுடன், குருதிக் குழாய்களில், சிறுநீரகம், விழித்திரை ஆகியவற்றினையும் பெரும்பாலும் பாதிக்கக்கூடும். எம்மில் ஐவரில் ஒருவருக்கு, மிகவதிகவளவான குருதி வெல்லம் காணப்படுவதாகவும், நீண்ட காலமாக உயர்ந்த அளவில் இன்சுலின் சுரக்கப்படுவதினால் நடைபெறும் ஆக்கச்சிதைவு தாக்கங்களை எதிர்த்து சமாளித்துப் போக இவர்களால் முடியாதிருப்பதாகவும் வைத்தியர்கள் கூறுகிறார்கள். சேமிப்புக் கலங்கள வெல்லத்தால் மிகவும் நிரம்பியிருப்பதனால், வெல்லத்தை மேலும் சேமிக்கச் செய்யும்படி இன்சுலின் தரும் தூண்டல்களை செய்ய முடிவதில்லை. அத்துடன் குருதியிலிருந்து வெல்லத்தை அகற்ற இன்சுலின் தரும் செய்தியை கவனத்திலெடுக்காத கலங்களாக மாற்றப்பட்டுவிடுகின்றன. இதன் விளைவாக குருதியில் வெல்ல அளவு அதிகரிக்கும் அதே வேளை குறைந்த அளவிலான கலங்களிலேயே சேமிக்கப்படக்கூடிய நிலையில், குருதியில் வெல்லம் அதிகரித்து இருப்பதனால் இன்னும் அதகமான இன்சுலினைச் சுரக்கும் வண்ணம் சதையம் தூண்டப்படுகிறது. இந்நிலைமை மிகவும் ஆபத்தானதொரு ஆக்கச் சிதைவு சமநிலைக் குழப்பத்தை ஏற்ப்படுத்துவதனால், பல கடுமையான நோய்நிலைகளான கட்டாக்காலி முழுமைபெறாத அணுக்களினால் ஏற்படும் சேதம் (பிறி றடிகல்ஸ் டமேச்), உயர் குருதி அழுத்தம், வழமைக்கு மாறான குருதியழுத்தம் (கைபரென்சன்), குருதியில் ஆரோக்கியமற்ற கொழுப்பு சேர்மானங்கள், நீரிழிவு வகை 2 போன்றன தோன்றுகின்றன. மனவழுத்த நிலையும இன்சுலின் எதிர்ப்பு நிலையுடன் இணைந்து செயற்படும் பொழுது, உடல் இயற்கையாக குளுக்கோஸ், கொழுப்பமிலங்களை குருதியினுள் விடுவிக்கின்றது. மேலும் இது மூளையைத் தூண்டி மனவழுத்த ஓமோன்களை விடுவிக்கும் பொழுது, இவை சேமிப்புக் கலங்களை மேலும் இன்சுலின் தூண்டலிற்கு உணர்வற்றதாக்குகின்றது. இந்த சூழ்நிலையில் கொழுப்புக் கலங்கள் இயற்கைக்கு மாறாக ஊதி உப்பிப் போகின்றன. மேலும் இவை புதிதான கொழுப்பு கலங்களை உற்பத்தி செய்கின்றன.

இன்சுலின் எதிர்ப்புத் தன்மை தோன்றியவர்களிடத்தில் இடுப்பிலும், கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் உப்பிய நிலை தெரியும். இப்பொழுதில் இந்நிலை உள்ளவர்களின் உடல் பருமன் அதிகரிக்கும். உடலின் உருவம் பியர் பழம் போன்று மேற்பகுதி சிறுத்தும் இடைப்பகுதி பெருத்தும் காணப்படவேண்டிய வடிவத்திலிருந்து அப்பிள் வடிவத்திற்கு அதாவது மேல் பகுதியும் பருத்து இடைப்பகுதி மிகவும் பருத்து குண்டாக மாறிவிடுவர், முகம் வட்டவடிவம் (முழு சந்திர வடிவம்) பெறும். வெளித் தோற்றத்திலிருந்தே ஒருவர் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை ஏற்ப்பட்டதனால் உடல் எடை அதிகரிப்பு ஏற்ப்பட்டதா எனக் கூறமுடியும். இவற்றுடன் கூட, நீண்ட நாளாக களைப்பு, சிந்தனைத தெளிவின்மை காதுச் சோணை மடிப்புகள், தோல் மடிப்புகள், இனிப்பு பண்டங்களுக்கு வரம்பு கடந்த விருப்பம் போன்றன தெளிவாக தென்படும். நீங்கள் பின்வருவனவற்றால் பாதிக்கப்படுகின்றீர்களா? - அதிகளவு உடல் கொழுப்பு - வெல்லம் செறிந்த உணவுக்கும் பானங்களுக்கும் அவாவுதல். - உயர் குருதியழுத்தம் - நீண்ட நாளாக சக்தியற்ற நிலை, உற்சாகமின்மை. - சிந்தனை தெளிவின்மை – துரிதமாக, உடனடியாக கூர்மையாக சிந்திக்க முடியாமலிருத்தல். - தசை தடிப்புக்கள் - கழுத்து, இறைப்பகுதி, அக்குள் பகுதிகளில் காணப்படும். - உணவின் பின்னர் வயிறூதிய உணர்வு - உலர்ந்த, செதில் போன்ற தோல், வெடிக்கும் நகம், நலிந்த கேசம். - மூலைவிட்ட கோட்டிலமைந்து காதுச்சோணை மடிப்பு - உடல் தோற்றம் இடுப்பிற்கு மேலாக அப்பிள் போன்றிருத்தல் - சாப்பிட்ட பின் மிகவும் அதிகமாக களைப்பாகவிருத்தல் - முடியும், நகமும் உலந்து உடையும் தகவுடையதாகவிருத்தல் - தோலின் வாழிப்புத்தன்மை குறைந்து போதல். உடற்பருமனைக் குறைப்பதற்கான உணவுத் திட்டம் (டயற் பிளான்): உணவுத் திட்டமொன்றில் குருதி வெல்ல அளவுக் குறிகாட்டி (கிளைசீமிக் இன்டெக்ஸ்) உணவுகளின் அடிப்படையில், நிலையான குருதி வெல்ல அளவைத் தரும் வகையில் அமைய வேண்டும். இதனைப் பின்பற்றும் பொழுது ஆரோக்கியமான ஆக்கச் சிதைவு பேணப்படுகிறது. குருதி வெல்ல அளவைக் குறைத்தல், இன்சுலின் அளவைக் குறைத்தல் ஆகியவை தான், உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த வழிகளாகும். பின்வரும் வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் இதனை அடையலாம்.

1. உயர் வெல்லக் குறியீடு கொண்ட உணவை முற்றாக அகற்றவேண்டும் அல்லது மிகவும் குறைக்கவேண்டும். உயர் வெல்லக் குறியீடு கொண்ட உணவுவகைகள் (உயர் குறி  தாழ் குறி இறங்கு வரிசை) வெள்ளை அரிசி, வெள்ளைப் பாண், வெதுப்பிய உருளைக்கிழங்கு (ஜக்கெற் பொட்ரற்ரோ), அரிசிக்கேக்.

2. தினந்தோறும் 30 நிமிட தேகப்பியாசம்: சேமிக்கப்பட்ட கொழுப்பைப் பயன்படுத்த தினமும் 30 நிமிடம் நடந்தாலே, நிறைகுறைக்கும் பாதையின் ஆரம்பத்தில் நடக்கத் தொடங்கிவிடுவீர்கள். ஏதாவது சிறப்பான உடல் அப்பியாசங்களை தொடங்க உத்தேசித்தால் உங்கள் வைத்தியருடன் ஆலோசனை செய்யவும்.

3. நிரம்பிய கொழுப்புகளைக்கொண்ட (உ-ம் சிவப்பு இறைச்சி, பேஸ்றீஸ், பாலுணவுகள்), மாற்றப்பட்ட கொழுப்பமிலத்தைக் கொண்ட உணவுகள் (மார்கறின்ஸ், மாற்றம் செய்யப்பட்ட தாவர எண்ணெய்கள் (றிபைண்ட் வெயிற்ரபிள் ஒயில்), தயார் செய்யப்பட்ட உணவுகள் (புறோசெஸ் பூட்), இவை யாவும் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைத் தோற்றுவிக்கின்றன. அதுவும் உயரளவு வெல்ல உணவுகளை உட்கொள்ளும் பொழுது இன்னும் அதிகமாகிறது. 

4. நார்ச்சத்துணவுகளை கொண்ட முழு உணவுகளை உண்ணவேண்டும்: இவற்றை முழு உணவுகளாக உட்கொள்ளும் பொழுது, மேலதிகமான போசாக்குப் பொருட்கள் கிடைப்பதோடு உணவிலுள்ள வெல்லம் தாமதமாகவே குருதியில் கலக்கின்றது. 

5. தினமும் நிறையுணவு: தினமும் எமதுணவில் 55சதவீதம் மாப்பொருள் (வெல்லக் குறியீடு குறைந்தவை), 30 சதவீதம் கொழுப்பு ( நிரம்பிய கொழுப்பைத் தவிர்க்கவும்), 15 சதவீதம் புரதம் (இரத்த சிவப்பு இறைச்சி வகைகளைக் தவிர்க்கவும்) ஆகிய அளவுகளில் கலந்திருக்கவேண்டுமென அறிவுரை கூறப்படுகிறது. 

6. இயற்கையாக விளைந்த சேதன (ஓகானிக்) உணவுகள்: இயற்கையாக விளைந்த உணவுகளை (ஓகானிக்) முடிந்தவரை உண்ணவும். வியாபார ரீதியாக விளைவிக்கப்படும் உணவுகளில் போசாக்குப் பொருட்களின் அளவு குறைவாக காணப்படுவதோடு, நச்சுப் பொருட்களும், வேறு இரசாயனங்களும் காணப்படுகின்றன. 

7. சேமிப்புக் கலங்களிலுள்ள கொழுப்பை எரிக்கவும், இக்கலங்கள் ஏற்படுத்தும் குருதியில் உள்ள வெல்ல, இன்சுலின் உயர் அளவுகளினால் ஏற்படும் பாதகமான விளைவுகளினின்று பாதுகாக்கவும் வேண்டிய குறிப்பிட்ட உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் ஏனைய போசாக்குப் பொருட்களாகியவற்றை உணவுக் குறைநிரப்பிகளாக எடுக்கவேண்டும். இது மீண்டும் உடல் நலம் பெறும் வேகத்தை அதிகப்படுத்துகின்றன. 

மூலிகை கலவை: மூலிகை கலவையான கோலா நட் அன்ட் கெல்ப் பிளஸ், நன்மைபயக்கும். வெயிற் மனேஞ்மென்ற் போமிலா: உடல் எடையைப் பேணுவதற்காக நான்கு மூலிகைகளின் சேர்மானத்தில் செய்யப்பட்ட மூலிகை மருந்துக்கலவையாகும். கூகுல், ஆட்டிசோக், கோலா நட், பிளாடரெக்; ஆகிய நான்கு மூலிகைகளைக் கொண்டிதாகும். இச்சேர்மானம் இயற்கையான எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இந்த மூலிகைச் சேர்மானம் உயர் குருதி அழுத்தம், இதய வருத்தம் போன்ற சிக்கலான, எடை அதிகரித்ததால் ஏற்படும் நோய் நிலைகளிலிருந்து நீங்கி வரவும் உதவி செய்யக்கூடும். கூகுல்: லசசா மரத்தில் வடியும் பிசினிலிருந்து கிடைக்கும் இம்மருந்து, உடல் நிறையைக் குறைக்கவும், மூட்டுக்களில் நல்ல அசைவை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான இதயத்தைப் பேணவும், தொன்று தொட்டு ஆயுர்வேத வைத்தியத்தில் பயன்பட்டு வந்துள்ளது. இதில் காணப்படும் கூகுல் ஸரெறோன்ஸ் எனப்படும் பதார்த்தம் எல் டி எல் கொழுப்பை ஒட்;சியேற்றம் செய்யாது தடுப்பதனால் ஆரோக்கியமான நாடிக்குழாய்களைப் பேணுகிறது. மேலும் இது தைரோட்டு ஓமோன் அளவை அதிகரித்து அடிப்படையான ஆக்கச் சிதைவு மட்டத்தை நிகழ்த்துவதனால் கொழுப்பு சேர்மானத்தைக் குறைத்து நிறை குறைய உதவுகிறது. ஆட்டிசோக்: இதில் சையநாரின் என்னும் இரசாயம், ஈரலின் தொழிற்பாட்டை நன்றே பேணுவதனால், ஆரோக்கியமான கொலஸ்ரோல் அளவை வைத்துக்கொள்கிறது. மேலும் ஈரலில் மேலதிகமாக் கொலஸ்ரோல் உற்பத்தியை தடைசெய்கிறது. அத்துடன் கொழுப்பு ஆக்கச் சிதைவையும் தூண்டி எடைக் குறைப்புக்கு உதவிசெய்கின்றது. கோலா நட்: இந்த மூலிகை உணவுக்கு அவாவுவதை குறைப்பதனால் பசியையும்; குறைக்கிறது. மேலும் சக்திக்கான ஆக்கச்சிதைவை உந்தித் தள்ளிவிடுகிறது. பிளாடரெக்: இந்த மூலிகையானது தைரோயிட்டின் செயற்பாட்டை ஒழுங்கு செய்வதற்காகவும், தைரோயிட் சுரப்பி வீங்கிய பொழுதிலும் (கொயிற்ரர்), உடல் பருமனானவர்களின் எடைக் குறைப்பிற்குமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது தைரோயிட் சுரப்பியின் செயற்பாட்டை திறம்பட செய்ய தூண்டுவதனால் உடலின் ஆக்கச் சிதைவு தாக்கங்களை அதிகரிக்கச் செய்கிறது.

Posted at 21:52:00 |  by யோகராஜா சந்ரு

நீர்க்கடுப்பை போக்கும் வெங்காயம்!


வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது. அந்த அளவுக்கு எல்லா சமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும்.

இவர்கள், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம்.

சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகுவிரைவில் நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும். 

Posted at 13:12:00 |  by யோகராஜா சந்ரு

செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் 2016 ஆண்டுக்கான கலை கலாசார விளையாட்டு விழா


(பிரகாஸ்) செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகத்தின் 2016 ஆண்டுக்கான கலை கலாசார விளையாட்டு நிகழ்வின் வீதி ஓட்ட நிகழ்வு இன்று (8.5.2016) காலை 7 மணிக்கு செட்டிபாளையம் மத்தி பிரதான வீதியில் ஆரம்பமானது. இந்த வீதி ஓட்டத்தை களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி மூ. கோபாலரெத்தினம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Posted at 11:27:00 |  by யோகராஜா சந்ரு
Blogger template. Proudly Powered by Blogger.
back to top